பன்னீர்ப்பூக்கள்
பன்னீர்ப்பூக்கள் - பாவண்ணன்; பக்.472; ரூ.525; கிழக்குப் பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-42009603.
தொலைபேசித் துறையில் பணியாற்றிய நூலாசிரியர், பள்ளிப் பருவம் முதல் அண்மைக் காலம் வரை, தான் நேரில் பார்த்து, பேசி, பழகி, உரையாடிய பல்வேறு மனிதர்கள் குறித்தும், அவர்களுடைய பின்னணி குறித்தும் 25 தலைப்புகளில் சுவாரசியமாகப் பதிவு செய்துள்ளார். இந்த நூலை அவரது சுயசரிதையின் ஒரு பாகமாகக் கருதும் அளவுக்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்தாலும் ஒரு மனிதனால் இன்னொரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது என்று 'வனவாசி' அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கும் நூலாசிரியர், வெள்ளந்தி மனிதர்களின் அக நுண்ணுணர்வுகளை புத்தகம் முழுவதும் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளும் பதிவு செய்யப்படாமல் விடுபட்டு விடக்கூடாது என்ற நூலாசிரியரின் அக்கறை போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது.
ஒவ்வொரு அத்தியாயமும், அன்றைய எளிய வாழ்க்கை முறையையும், இன்றைய அதிநவீன நாகரிக உலகின் பரபரப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுவதோடு மட்டுமல்லாது ஏக்கப் பெருமூச்சு விடவும் வைக்கிறது.
எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களின் தொகுப்பான இந்நூல் வாசிப்போரின் கடந்த கால நினைவு அடுக்குகளைத் தட்டி எழுப்புகிறது.