நூல் அரங்கம்

தி.மு.கழகம்: சில உண்மைகள், சில சந்தேகங்கள்...

DIN

தி.மு.கழகம்: சில உண்மைகள், சில சந்தேகங்கள்... - தமிழருவி மணியன், பக்.144; ரூ. 150; ஜீவா புத்தகாலயம், நாமக்கல் - 637 001; ✆ 76671 72172.

'துக்ளக்'கில் இதே தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகள், 'நெற்றிக்கண்'ணில் 1980-களின் தொடக்கத்தில் எழுதிய கலைஞருக்குத் திறந்த மடல்கள், ஜூனியர் விகடனில் எழுதிய சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவமாக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த காலம் தரப்படவில்லை என்றபோதிலும் துக்ளக்கில் வெளியான 10 கட்டுரைகளும் திமுக மீதும் அதன் தலைவர் கருணாநிதி மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

ஒரு கட்டுரையின் நிறைவு வரி... 'இந்த அரசியல் நோயின் பிறப்பிடம் எது? - அதுதான் தி.மு. கழகம்'. திராவிட நாடு தேய்ந்து மாநில சுயாட்சியான கதை பற்றிக் கூறுகையில், 1946-இல் ம.பொ.சி. கேட்ட சுயாட்சியை, 1961-இல் சம்பத் ஆதரித்த மாநில சுயாட்சியை 1963-இல் திமுக புதிதாகக் கண்டுபிடித்தது எனக் குறிப்பிடுகிறார்.

'ஒரு சமுதாய மக்களின் அறிவைத் தாலாட்டித் தூங்கவைத்து உணர்வை உசுப்பிவிடுவதற்கு வெறும் வார்த்தைகளே போதுமானவை' என நிரூபித்த அண்ணா இலக்கியம் எனில், கருணாநிதி அந்த இலக்கியத்துக்கான இலக்கணம் எனத் தொடரை முடிக்கிறார் ஆசிரியர்.

கருணாநிதியும் அவருடைய கழகமும் நடத்த வேண்டிய ஆத்ம சோதனையின் அவசியத்தை (சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த) திறந்த மடல்களில் விளக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

நாற்காலியில் மட்டும் கவனம் செலுத்தாதீர், சுயநலமே உனக்குப் பெயர்தான் தி.மு.கழகமா? போன்றவை சில தலைப்புகள். 'புழுதி படிந்த புறநானூற்று வீரம்' என்ற கட்டுரையில் 2009-இல் ஈழத் தமிழருக்கு நேர்ந்த அவலத்துடன் கருணாநிதியின் கடற்கரை உண்ணாவிரதத்தையும் - எதிர்காலம் வீர வரலாறுகளையும் மறப்பதில்லை, இனத்துரோகங்களையும் மறைப்பது இல்லை - கடுமையாக விமர்சிக்கிறார். தமிழக அரசியலின் ஒரு பக்கத்தை அறியப் படிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT