முகப்பு
நூல் அரங்கம்

ஒளவையின் செந்தமிழ்ப் புதையல்

காணலில் வாசகர்களுக்கு ஒளவை நடராசன் அளித்த நேர்காணலும், வேறு சில நேர்காணல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

Updated On : 2 மார்ச், 2026 at 6:06 PM
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 6:05 PM

ஒளவையின் செந்தமிழ்ப் புதையல் - ஒளவை அருள்; பக்.424; ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், சென்னை-600 018, ✆ 96000 64311.

தமிழறிஞர் ஒளவை நடராசன், இலக்கியத் துறைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. பட்டிமன்றங்கள், இலக்கியக் கூட்டங்கள், எழுத்துப் பணி என்று பன்முகத் தன்மையோடு இயங்கிய அவர் இணையம் வந்தபோது, 2010-ஆம் ஆண்டிலேயே ஃபேஸ்புக்கில் தனது செறிவார்ந்த கருத்துகளை நாள்தோறும் பதிவிட்டவர்.

Updated On : 2 மார்ச், 2026 at 6:05 PM

பல நூல்கள், கட்டுரைகளை எழுதிய ஒளவை நடராசன் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிய நூல்களின் அணிந்துரைகளே 3,000-க்கும் மேல் இருக்கும் என்றும், அவர் மறைந்தவுடன் அந்த அணிந்துரைகள் தபாலிலும், வாட்ஸ் -ஆப்பிலும் நாள்தோறும் வந்தவண்ணம் இருந்தன என்று அவரது மகனான நூலாசிரியர் கூறுகிறார். அவர் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. சென்னையில் 2026 பிப்ரவரி 21-இல் நடைபெற்ற இலக்கிய விழாவில், இந்த நூல் அன்பளிப்பாகவே வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

உ.வே.சா., வ.உ.சி., அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஏ.எம்.ராமசாமி, வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் குறித்து ஒளவை நடராசன் எழுதிய அணிந்துரைகளில், அவர்களது முழு வரலாற்றையும், தமிழ்ப் பணிகளையும் நல்லதொரு எழுத்து நடையில் அறிய முடிகிறது.

சில ஆங்கில நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரைகள் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் என்பதை அறிய முடிகிறது. கலை, இலக்கியம், வரலாறு, கவிதைகள், கட்டுரைகள், தன்வரலாறு என்று பல்வேறு தலைப்புகளில் வெளிவந்த நூல்களுக்கு அவர் அளித்துள்ள அணிந்துரைகள் மூலம் அவரது தமிழ்ப் பற்றும், சங்க காலம் முதல் நவீன கால இலக்கியம் வரையிலான முக்கிய விஷயங்களை அறியலாம். "துக்ளக்' இதழ் நடத்திய நேர்

காணலில் வாசகர்களுக்கு ஒளவை நடராசன் அளித்த நேர்காணலும், வேறு சில நேர்காணல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.