ஒற்றைத்தோடு
ஒற்றைத்தோடு - மாத்தளை சோமு; பக்.256; ரூ.300; தமிழ்க்குரல் பதிப்பகம், 5/ பி-15 ஐந்தாவது மெயின் ரோடு, ஞானம் காலனி, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி-620 003.
தாய்த் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட நூலாசிரியர், இலங்கையில் மலையகத்தில் பிறந்து வாழ்ந்து யுத்த காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து சென்றவர். இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய இரு தேசங்களில் வாழ்ந்த, வாழ்கின்ற தமிழர்களின் வாழ்க்கையைக் கதைகளாக எழுதிவரும் இவர், இலங்கைப் போருக்குப் பிந்தைய ஈழம் எனும் புதிய பரிணாமத்தை உலகுக்கு எடுத்துரைக்கிறார்.
தினமணி கதிர், குமுதம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியான 23 கதைகளின் தொகுப்பே இந்நூல். மனிதத்தின் உயிர்ப்பையும், துளிர்ப்பையும், புத்துயிர்ப்பையும் முன்னிறுத்தும் வகையில் உள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத் தீவு வட்டார மொழிகள், டேனிஷ், ஆங்கிலம், சிங்களம் என பன்மொழி வழக்குகள் இந்தக் கதைகளில் நிரம்பியும், பல்குரல் தன்மையோடு பல்பண்பாட்டுத் தன்மை கொண்டதாகவும் உள்ளன. ஒவ்வொரு கதையும் படிக்கப் படிக்க ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை நினைத்து கண்ணீரை வரவழைக்கிறது.
நாடு, இன, மொழி எல்லைகளைக் கடந்து வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் சமகாலச் சமூக, பொருளாதாரப் பண்பாட்டு வாழ்வியலைப் படம்பிடித்து காட்டும் இந்தத் தொகுப்பு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் ஓர் புதிய அத்தியாயம். நூலாசிரியரின் பிற நூல்களின் குறிப்புகளை பிற்சேர்க்கையில் இணைத்துள்ளது சிறப்பு. ஈழத் தமிழ் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.