முகப்பு
நூல் அரங்கம்

பஞ்சவர்ணம்

உணர்வுகளால் நிரம்பிய எளிமையான மனிதர்களை உலவவிட்டு ஈர உணர்வை அளிக்கிறார் ஆசிரியர்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

பஞ்சவர்ணம் - ஆசு; பக்.240; ரூ.250; கவிதா பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 42161657.

நாகரிகம் புகத் துவங்காத ஒரு கிராமத்தின் உறவுகளிடையே ஏற்படும் உணர்வு ரீதியான உறவாடலே இந்த நாவல்.

நாவலின் தொடக்கத்திலேயே ஒரு கனத்த மௌனத்தை நாம் உணரத் தொடங்குகிறோம். உணர்வுகளால் ஆளப்படும் கிராமத்து மாந்தர்களை அன்பு, கோபம், ஏமாற்றம், வலி என

அந்தந்த கதாபாத்திரங்களின் வாயிலாகவே காண்பிக்கிறார். உழவு மொழியே நாவலின் உயிர்.

கதைமாந்தர்களின் பெயர்களைத் தெரிவு செய்வதில் மிகுந்த கவனத்தைக் கையாண்டு அவரவரின் சூழலின் வழியே வெளிப்படும் அவர்களின் மொழியை நமக்கு காண்பித்து நம்மை நாவலுடன் கைகோக்கச் செய்கிறார் ஆசிரியர்.

கதை நடக்கும் காலகட்டத்தை அங்கங்கே நடக்கும் அரசியல் நிகழ்வின் மூலம் நமக்கு உணர்த்துகிறார். குலத் தொழிலிலிருந்து வேறு ஒன்றுக்கு நகர்தல் கட்டாயமாக்கப்பட்ட காலமாகவும் தெரிகிறது. நம் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் உறவுகளுக்கு இணையாக நாவிதருக்கும் வண்ணாருக்கும் தரப்படும் முக்கியத்துவம் மறைந்துபோய்விட்டது என்பதை ஏற்றுகொள்ளத் தோன்றுகிறது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல; மண்ணுக்கும் ஆண், பெண் குணம் உண்டு என காண்பித்து, கரும்பு விளைச்சலை அவர் சொல்லும் விதம் சிறப்பு. உணர்வுகளால் சூழப்பட்ட மாந்தர்களின் வாழ்வில் கருப்பனின் நுழைவு, அந்தக் கருப்பன் காட்டும் கடவுள், அந்தக் கடவுளால் விடிவுகாலம் பிறக்கும் என வெகுசுலபமாக ஏற்றுக்கொள்ளும் இடம்தான் அரசியல்மாற்றம் தொடங்கும் காட்சி என நம்ப வைக்கிறார் நூலாசிரியர். உணர்வுகளால் நிரம்பிய எளிமையான மனிதர்களை உலவவிட்டு ஈர உணர்வை அளிக்கிறார் ஆசிரியர்.

முழு கட்டுரையைப் படிக்க →