கலைஞர் எனும் தாய்
நல்லதொரு வரலாற்று நூல்.
கலைஞர் எனும் தாய் - எ.வ.வேலு; பக்.360 (பெரிய அளவில்); ரூ.1,000; சீதைப் பதிப்பகம், சென்னை-5; ✆97907 06549.
'குவளையில் பூத்த குறிஞ்சிமலர்' என்று தொடங்கி, வாழ்க அண்ணன் கலைஞரின் புகழ், வளர்க தளபதி அவர்களின் தொண்டு என 33 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இந்நூல் முதல் 31 அத்தியாயங்களில் கலைஞரின் வரலாற்றை தான் அறிந்தவற்றிலிருந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். கடைசி இரு அத்தியாயங்கள் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியரான அமைச்சர் எ.வ.வேலு.
கருணாநிதி முதல்வரானதும், 'தொழுநோய், பிச்சைக்காரர்கள் துயர்துடைப்பு' தொடங்கி 'தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு உயர்நிலை ஆணையம்' அமைத்தது என 52 சாதனைத் திட்டங்கள் நூலில் பதிவு செய்யப்படுள்ளன.
அழியாப்புகழ் கொண்ட வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, புதிய பூம்புகார், அண்ணா நூற்றாண்டு நூலகம் படைத்ததை வியந்துள்ளதுடன் மகளிர் சொத்துரிமை, மகளிர் இடஒதுக்கீடு போன்ற வரலாற்று சாதனைகளையும், பதிவுகளையும் விவரித்துள்ளார்.
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு குறள், அதற்கு கலைஞர் எழுதிய உரையையும் குறிப்பிட்டு கலைஞரின் தாய்மைப் பண்பு உள்ளிட்ட அவருடைய திறமைகள் என்ன என்பதை விளக்கியிருக்கிறார். படங்களுக்குப் பதில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் படங்களைக் கோட்டோவியங்களாகச் சேர்த்திருப்பது சிறப்பு.
இந்த நூல் மூத்த வயதினருக்கு அசை போடவும், இளையதலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் கருணாநிதியின் சாதனைகள் என்னவென்று விளக்கும் ஆவணமாகவும் அமைந்துள்ளது. நல்லதொரு வரலாற்று நூல்.