நூல் அரங்கம்

சிங்கம்பட்டி ஜமீன் கதை

மிகச்சிறந்த வரலாற்று பதிவுகள் நமக்கு இந்நூலின் வாயிலாகத் தெரியவருகிறது.

DIN

சிங்கம்பட்டி ஜமீன் கதை - முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.162; ரூ.220; காவ்யா, சென்னை-24; ✆ 044 - 2372 6882.

ஜமீன் என்றாலே ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டியவர்கள் என்றும் அவர்களுக்கு இசைந்து வாழ்ந்தவர்கள் என்றும் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற பல ஜமீன்களும் உண்டு என பதிவிடுகிறார் ஆசிரியர். ஜமீன்கள் தோன்றிய வரலாறு, சிங்கம்பட்டி ஜமீனின் மூலம் எங்கிருந்து தொடங்குகிறது, இவர்களின் பெயர்களுக்கு முன் இடம்பிடித்திருக்கும் பட்டங்களின் காரணம் என வரலாற்று நிகழ்வுகளை ஆதாரங்களுடன் கூறி ஜமீனுக்கு சிறப்பு செய்கிறார் ஆசிரியர்.

ஜமீனாக இருந்த சேதுபதி மகாராஜா வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வான விவேகானந்தரின் சிகாகோ பயணத்துக்கு பொருளுதவி செய்தது, பெருமைமிகு சிகாகோ உரைக்குப் பிறகு விவேகானந்தர் திரும்பி வந்ததும் அவர் பாதத்தை ஜமீன் தன் தலையில் வைத்து வரவேற்றதும், ஜமீனுக்கு விவேகானந்தர் மரத்தால் ஆன யானை சிற்பம் பரிசளித்தது, அச்சிற்பம் சிங்கம்பட்டி அரண்மனையில் இடம்பிடித்தது போன்ற மிகச்சிறந்த வரலாற்று பதிவுகள் நமக்கு இந்நூலின் வாயிலாகத் தெரியவருகிறது.

அரண்மனையினை சுற்றிக்காண்பிக்கும் ஆசிரியர், ஜமீன்தார் ஆட்சிக்கு உள்பட்ட இடங்களையும் அங்கிருக்கும் கோயில்களையும், நடக்கும் திருவிழாக்களையும், மழை வேண்டி நடக்கும் பூஜை முறைகளையும் நேரில் சென்று பார்த்து பங்கெடுத்து நமக்கு காட்டி இருக்கிறார்.

மேலும் இந்நூலில் சொரிமுத்தையனார் கோயில், பட்டவராயன் கதை, அக்கோயிலில் சொல்லப்படும் ஆச்சர்ய நிகழ்வுகள் என சுவாரஸ்மாகப் பதிவிடுகிறார் ஆசிரியர்.

ஜமீன் முறை ஒழிக்கப்படுவதற்கு முன்பே இவர் பட்டம் ஏற்றதால் இவர் காலமாகும் வரை இவரே கடைசி ராஜாவாக இருந்திருக்கிறார்.

பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருடனும், பதிப்பகத்தாருடனும் இவர் நல்லுறவு பேணி பல புத்தகங்கள் வெளிவரக் காரணமாக இருந்திருப்பதாக இந்நூலை வாசிக்கும் நமக்குத் தெரியவருவது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT