முகப்பு
நூல் அரங்கம்

அஹில்யாபாய் ஹோல்கர்

வெவ்வேறு கலாசாரத்தினர் இந்தியாவில் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான வழியை அஹில்யாபாய் ஹோல்கர் வாழ்ந்து காட்டி சென்றிருக்கிறார்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:16 AM
பகிர்:

அஹில்யாபாய் ஹோல்கர் - வி.வி.தாகூர்; தமிழில் - பி.ஆர்.மகாதேவன்; ரூ.300; பக்.256; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 95000 45609.

மகத்தான மனிதர்கள் தமது செயல்களாலும், நல்ல மனிதர்கள் தமது சிந்தனைகளாலும் ஒரு தேசத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள். அந்த வகையில் மத்திய இந்தியா, காந்தேஷ், நாசிக், நாகர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரின் வாழ்க்கை வரலாற்றை 15 அத்தியாயங்களில் இந்நூல் விளக்குகிறது.

முதல் 12 அத்தியாயங்களில், அஹில்யாபாயின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியிலும், வெளியிலுமாக அவர் செய்தவை, அவருக்குக் கிடைத்த பயிற்சிகள் விவரிக்கப்படுகின்றன. அடுத்த இரண்டு அத்தியாயங்கள் பேஷ்வாக்கள் முன்னெடுத்த போர்களை விவரிக்கின்றன. அஹில்யாபாய் குறித்த மக்கள் கருத்துகளை இறுதி அத்தியாயம் எடுத்துரைக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளாக மோதல்போக்கைக் கடைப்பிடித்த இரண்டு கலாசாரங்களுக்கு இடைய நல்லிணக்கம், ஒத்திசைவு, மகிழ்ச்சியை தனது அதிகாரம், செயல்பாடுகளால் அஹில்யாபாய் நிலைநாட்டினார். இரண்டு கலாசாரத்தினரும் அவரவர் வழியில் அவரவர் எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதித்தன் மூலம் இச்சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.

எந்த சக்தியும் முடக்க முடியாதபடி ஹிந்து தர்மம் வளர வழி வகுத்ததோடு, இந்திய தேசிய வளர்ச்சியில் தனக்கான வழியைப் பின்பற்றிக் கொள்ளவும், தனித்தன்மை வாய்ந்த இடத்தை வகிக்கவும் இஸ்லாமிய கலாசாரத்துக்கும் அனுமதி கொடுத்தார். உலகின் எந்தவொரு வம்சமும் இப்படியான சாதனையை நினைத்து பெருமிதப்பட முடியும் என்கிற அளவுக்கு அஹில்யாபாயின் ஆட்சி இருந்தது.

வெவ்வேறு கலாசாரத்தினர் இந்தியாவில் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான வழியை அஹில்யாபாய் ஹோல்கர் வாழ்ந்து காட்டி சென்றிருக்கிறார். அந்த வகையில் அவருடைய இலக்கு மகத்தானது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →