தர்மத் தலைவன் தோழர் இரா.நல்லகண்ணு
இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
தர்மத் தலைவன் தோழர் இரா.நல்லகண்ணு- ப.பாலசுப்பிரமணியன்; பக்.214; ரூ.245; சங்கர் பதிப்பகம், சென்னை-49; ✆ 044-2650 2086.
தோழர் இரா. நல்லகண்ணுவின் நூறாவது பிறந்த நாளையொட்டி அவருடைய போராட்டங்களையும் வாழ்வையும் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 41 கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கிறது இந்த நூல்.
மாணவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களுக்கெல்லாம் அன்றைக்கு ஆசிரியர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர், நல்லகண்ணு எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனார், பலவேசம் செட்டியார் யார்? என சிறப்பாக அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நல்லகண்ணுவின் பங்களிப்பு குறித்து மட்டுமின்றி, இயக்கத்தைப் பற்றியும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. நெல்லையில் அவருடைய கல்லூரிப் படிப்பு, வானமாமலை, தொ.மு.சி. ஆகியோருடன் கொண்ட அவர் கொண்ட நெருக்கமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
போராட்டமே வாழ்க்கையாக வரித்துக்கொண்ட அவர், இளம்வயதில் தொடங்கி பங்கேற்ற ஜமீன்தாரி ஒழிப்பு, கோயில் நுழைவு, சுசீந்திரம் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நிலச் சட்டத் திருத்தப் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களும் பெற்ற வெற்றிகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
உணவுப் பஞ்சம் பற்றியும் அது தொடர்பான செயல்பாடுகள் பற்றியும் விளக்கும் நூலாசிரியர், தமிழ்நாட்டின் உணவுப் பிரச்னைகளையும் அதனால் நேரிட்ட ஆட்சி மாற்றத்தையும் விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நல்லகண்ணுவின் தலைமறைவு வாழ்க்கை, நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தது, சிறை வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்கள் எல்லாம் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நல்லகண்ணுவின் போராட்ட, அரசியல் செயல்பாடுகளுடன், தனிப்பட்ட வகையில் புத்தக வாசிப்பு, பாரதி பற்று ஆகியவற்றுடன் பிற்காலத்தில் அவர் பாராட்டப்பட்டதைப் பற்றியெல்லாம் இந்நூல் பதிவு செய்திருக்கிறது. பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஒருவரின் பொது வாழ்க்கையையும் தன்னலமின்மை பற்றியும் அறிந்துகொள்ள இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.