சாகாவரம்
சமூகத்தின் மீது பற்று கொண்டவன் என பன்முகம் கொண்ட ஒரு தனிமனிதனின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைத் துல்லியமாக இந்நூலை வாசிக்கும்போது உணர முடிகிறது.
சாகாவரம் - ய.லக்ஷ்மி நாராயணன்; பக்.176; ரூ.140; அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை- 600004; ✆ 044 -2464 1314.
'வான வீதியில் மேற்கு எல்லையை நோக்கிப் பகலவன் அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தான். விதவிதமான வர்ணரேகைகளுடன் கூடிய மேகத் திரள்களுக்கிடையே வட்ட வடிவமான பொன்னிறச் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதைக் கண்டு, மனதுக்குள் தனி மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாவது இயற்கையே' என கவிதை நயத்துடன் முதல் அத்தியாயம் தொடங்குகிறது.
விடுதலை, தில்லைநாயகியின் வருகை, நிச்சயதார்த்தம், கந்தப்பர் மாறினார், மூர்க்கனின் தோல்வி, சாகாவரம் என மொத்தம் 16 அத்தியாயங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
தேசபக்தர் குமாரஸ்வாமி நம் நாட்டின் உத்தம தியாகிகளைப் போற்றக் கூடியவர். 19 ஆண்டுகள் தென்னாட்டையே கிடுகிடுக்கச் செய்த சேந்தனூர்க் கலகத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் நடந்துகொண்ட தன்மைக்கு நீதிபதியே மதிப்புக் கொடுத்தார். தனக்காக எந்த வழக்குரைஞரும் வேண்டாம் என்றும், தானே வாதாடப் போவதாகவும் அவர் ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.
விசாரணை முடிவடைந்து அவர் குற்றவாளிதான் என முடிவு செய்யப்பட்டது. அவர் தந்த வாக்குமூலத்தில், 'என்னுடைய லட்சியம் மகத்தானது. இந்த தேச மக்கள் அனைவருக்குமான பொதுவான லட்சியத்துக்காக நான் உழைப்பது தவறென்றால், என் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயார். ஆயினும் கடமையிலிருந்து நான் பின்வாங்க முடியாது' என்ற வாசகங்கள் இருந்ததைக் கண்ட நீதிபதி அவரைப் புகழ்ந்திருக்கிறார்.
இந்த நூலின் முதல் பதிப்பு கடந்த 1947-ஆம் ஆண்டு வெளியாகியிருப்பதால், எழும்பூர் ஸ்டேஷன், ஈஸி சேர், ரிஜிஸ்தர் விவாகம், அபிலாஷைகள், பேஷ் பேஷ் என அப்போது புழக்கத்தில் இருந்த சொற்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. எனினும் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தலைவன், தொண்டன், சமூகத்தின் மீது பற்று கொண்டவன் என பன்முகம் கொண்ட ஒரு தனிமனிதனின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைத் துல்லியமாக இந்நூலை வாசிக்கும்போது உணர முடிகிறது.