எளிய தமிழில் திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம் (பாஞ்சாலங்குறிச்சி சண்டை உட்பட) - எஸ். குருகுஹதாஸப் பிள்ளை; தமிழில்: அச்யுதன் ஸ்ரீ தேவ்; பக். 200; ரூ. 230; சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; ✆ 81480 66645.
எளிய தமிழில் மாற்றப்பட்ட சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எட்டயபுரம் சமஸ்தான பணியாளர் என்ற அறிமுகத்துடன் குருகுஹதாஸப் பிள்ளையால் எழுதப்பட்ட பழந்தமிழ் நூல் இது.
பூர்வ காலம், தற்காலம் எனப் பிரித்துக்கொண்டு பல்வேறு தலைப்புகளில் திருநெல்வேலிச் சீமையின் வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர், திருநெல்வேலி என்ற பெயர், சங்க காலப் பாடல்களிலோ, அந்தக் கால கல்வெட்டுகளிலோ காணப்படவில்லை; பாண்டியர் வரலாற்றின்படி தென்பாண்டி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்.
விஜயநகர சமஸ்தானத்தின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாடு எவ்வாறு நாயுடுகள், நாயக்கர்கள் ஆட்சியின் கீழிருந்தது என்பதுடன், பாளையக்காரர்களின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் விவரிக்கப்படுகிறது.
பொ.யு. 1532- இல் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்குள் எவ்வாறு போர்த்துகீசியர்களும் அவர்களுடனேயே கிறிஸ்தவமும் யார் அழைத்ததால், எதற்காக நுழைந்தனர் என்பது விளக்கப்படுவதுடன் அவர்களின் செல்வாக்கும் தேய்வும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாயக்கர்கள் ஆட்சியின் முடிவுடன் நிஜாமின் படையெழுச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் சண்டை உள்பட பூலித்தேவரின் போர்கள், இவற்றுக்கான அரசியல் பின்புலங்களும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
யூசுப் கானின் செல்வாக்கு, வீழ்ச்சியுடன் அவர் ஆங்கிலப் பெண்ணை மணந்த தகவலும் தெரிவிக்கப்படுகிறது.
திருநெல்வேலி சரித்திரத்தில் மேஜர் பானர்மன் பங்களிப்புடன் அவர் எழுதிய கடிதங்கள், குறிப்புகள் உதவியுடன், கட்டபொம்முவின் மரணம் எவ்வாறு நேர்ந்தது என்பதும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாளையக்காரர்களின் எழுச்சி பற்றியும் பாஞ்சாலங்குறிச்சியின் முடிவு பற்றியும் தனித்தனியே எழுதியுள்ள ஆசிரியர், ஆங்கிலேயே அதிகாரியான கர்னல் வெல்ஷின் குறிப்புகளையும் தந்திருக்கிறார். தூத்துக்குடியின் முத்துக்குளித்தல், திருநெல்வேலியில் கிறிஸ்தவம் எவ்வாறு வேர்கொண்டது பற்றியும் வெள்ளம், கொள்ளை நோய்கள் பற்றிய குறிப்புகளையும் வேறு சில வரலாற்று நிகழ்வுகளையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.