சிந்திக்க வைக்கும் சிலப்பதிகாரம் (சிலப்பதிகார ஆய்வடங்கல்)
தமிழ் ஆர்வலர்கள், சிலப்பதிகார ஆய்வு மாணவர்கள் இந்நூலைப் படித்து பயன் பெறலாம்.
சிந்திக்க வைக்கும் சிலப்பதிகாரம் (சிலப்பதிகார ஆய்வடங்கல்) - அ.பிச்சை; பக்.256; ரூ.300, கபிலன் பதிப்பகம், மதுரை-20; ✆ 90803 30200.
தமிழில் கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும்தான் அதிக அளவில் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட காப்பியங்களாகும். தமிழர் வாழ்வோடு ஒன்றிவிட்ட காப்பியமான சிலப்பதிகாரம் குறித்த ஆய்வை இந்த நூல் மையமாகக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தின் ஆய்வு சார் தரவுகளை பல ஆய்வறிஞர்களின் மேற்கோளுடன் படைத்திருப்பது படிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.
கதைப்பாடல் தோற்றம் என்ற தலைப்பில் உள்ளடக்கங்கள் பல வியப்பூட்டும் தகவல்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, 'காப்பிய தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில், பெருங்காப்பியம் எது என்பது குறித்தும், தமிழ்க்காப்பியத் தோற்றம் குறித்தும், வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுகள் குறித்தும் மாணவர்களுக்குத் தேவைப்படும் பல தரவுகளை இந்நூல் தருகிறது. இது தவிர சிலப்பதிகார பதிப்புகள், சிலப்பதிகார ஆய்வுகள், கருத்தரங்க கட்டுரைகள் என ஏழு தலைப்புகளில் நூல் நீண்டு செல்கிறது.
கருத்தரங்க கட்டுரைகள் அத்தியாயத்தில் இளங்கோ கண்ட எழுசீர் விருத்தம், சிலப்பதிகாரமும், மாதவி காப்பியமும் ஒப்பீட்டாய்வு,சிலப்பதிகாரத்தில் இந்திர வழிபாடு போன்ற தலைப்புகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் தமிழ் ஆர்வலர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக அமைந்துள்ளன.
மேலும் கண்ணகி கோயில் பற்றிய குறிப்பு, சுருளி மலைத் தொடர்ச்சியில் அமைந்த மங்கலதேவி கண்ணகி கோட்டத்தை அமைத்தது யார் அதை ராஜராஜ சோழன் முதல் அக்கால மன்னர்கள் புனரமைத்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இப்போது மங்கல தேவி கோயிலின் நிலை எவ்வாறு உள்ளது என்பன போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆர்வலர்கள், சிலப்பதிகார ஆய்வு மாணவர்கள் இந்நூலைப் படித்து பயன் பெறலாம்.