SWAMINATHAN
நூல் அரங்கம்

தமிழில் பயண இலக்கியம்

ஒவ்வொரு பயண அனுபவத்தையும் வாசிப்பது இன்றைய தலைமுறையினருக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

தினமணி செய்திச் சேவை

தமிழில் பயண இலக்கியம் - முனைவர் அ.பிச்சை; பக்.225; விலை ரூ.280; கபிலன் பதிப்பகம், அண்ணாநகர், மதுரை- 625 020, ✆ 90803 30200.

பயணம் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதியாகும். மற்றவர்களின் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், வாழ்க்கை நெறிகள், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நேரில் அறிய உதவுகிறது.

ஒரு சமுதாயத்தின் உயிரோட்டம் பயணத்தில் அடங்கியுள்ளது. பயணத்தை அனுபவிப்பவர்களுக்கு அது ஒரு கலையாகும். எந்த நோக்கமும் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அது பொழுதுபோக்கு அம்சமாகும். பயணத்தை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு அது ஓர் அறிவியலாகும்.

முனைவர் அ.பிச்சை எழுதிய இந்த நூல் இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும், புதிய நூற்றாண்டில் எழுதப்பட்ட பயண இலக்கியங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணங்கள், வெளிநாடுகளில் அவர்களுக்கு கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்கள், பொதுவான பயணங்கள் குறித்தும் விவரிக்கிறது. இத்துடன் நூலாசிரியரின் பயண அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள்; இந்திய மாநிலங்கள்; தமிழகத்தின் சிறப்புமிக்க பகுதிகளுக்கு பயணித்தது குறித்து எழுத்தாளர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள் எழுதிய நூல்களின் சுருக்கம் இடம்பெற்றுள்ளது.

ஏ.கே.செட்டியாரின் மலேயா முதல் கனடா வரை, மணியன்-இதயம் பேசுகிறது பயணக் கதை, கல்கி- கண்டேன் இலங்கையை, முனைவர் சா.வளவன்-பயண நூல் வளர்ச்சி, சிவசங்கரி- பாரத தரிசனம், அகிலன்- நான் கண்ட ரஷ்யா, செ.அரங்க நாயகம்- சோவியத் நட்புறவுப் பயணம், நா.பார்த்தசாரதி- ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள், சௌகத் உஸ்மானி- ஒரு புரட்சியாளனின் பயணங்கள், இரா.செந்தில் - தருமபுரி முதல் பூடான் வரை, வே.திருநாவுக்கரசு- தமிழக அருவிகள் சுற்றுலா, சத்குரு- இமயத்தின் ரகசியங்கள், முனைவர் அ.பிச்சை-அமெரிக்கா போகலாம் வாங்க... என அவர்களது ஒவ்வொரு பயண அனுபவத்தையும் வாசிப்பது இன்றைய தலைமுறையினருக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்ஐகே வெளியீடு ஒத்திவைப்பு!

பாடகர் ஸுபீன் கர்க் வழக்கு: சிங்கப்பூர் சென்று விசாரணை நடத்தும் திட்டமில்லை! -அஸ்ஸாம் முதல்வர்

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக உயர்வு: 25,000 புள்ளிகளை மீண்டும் கடந்தத நிஃப்டி!

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

SCROLL FOR NEXT