இயல்கள் இசங்கள் நிஜங்கள் (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி)-ச.மணி, பக்.254; ரூ.350; விஜயா பதிப்பகம், கோவை-641 001. ✆ 0422-2382614.
கவிதைகளில் மரபுக் கவிதைகள் மாறி புதுக்கவிதையாகி இப்போது மூன்றடிக் கவிதையாக ஹைக்கூ வடிவம் எடுத்திருப்பதுபோல், ஓவியங்களின் பரிணாம வளர்ச்சியையும் அதன் காலங்களையும் காட்டுகிறது இந்நூல்.
மனிதனின் குரூரம் போர், அவனின் மென்மை கலை என்கிற பார்வையில் அந்தக் கலையின் மாற்றங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட பெயர்கள் 15.
இந்நூல் அந்த 15 பெயர்களால் பட்டியலிடப்பட்டு விரிகிறது.
பிரதி எடுப்பது ஓவியம் அல்ல; படைப்பாளியின் மனதைக் காண்பிப்பதுதான் ஓவியமாகும் என்கிறார் ஒரு பிரபல ஓவியர். இப்படி ஓர் ஓவியரின் கருத்தை ஆங்காங்கே கேலிச் சித்திரங்களில் அந்தந்த இசத்தைப் பற்றிய எள்ளலுடனும் விளக்கத்துடனும் தந்திருப்பது இந்தப் புத்தகத்தை வாசிக்க வைக்கிறது.
மாற்றங்களை ஏற்பவர்கள் ஒருபுறமென்றால், அதை ஏற்காதவர்கள் இன்னொரு புறம். இந்த ஓவிய இசங்களைக் கேலிச் சித்திரங்களால் வசைபாடி இருக்கிறார்கள். அதைச் சான்றுகளுடன் ஆசிரியர் தந்திருக்கிறார். இந்நூலில் இந்த இசங்கள் தோன்றிய காலகட்டமும் அது முடிவடைந்த காலகட்டமும் தெளிவாகத் தரப்பட்டிருக்கின்றன.
ரவி வர்மாவின் ஓவியத்தையும், சில்பியின் ஓவியத்தையும் ரசித்த நமக்கு, உலகின் பிரபலமான ஓவியர்களின் ஓவியத்தை எந்தக் கோணத்தில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறார் ஆசிரியர். இத்தனை தரவுகளையும்
ஓவியங்களையும் சேகரித்து தந்திருக்கும் நூலாசிரியரின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஓவியர்களுக்கான உலக அட்லஸ் இந்த புத்தகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.