உன்னை அறிந்தால்-சோம.வள்ளியப்பன்; பக்.128; ரூ.140; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014. ✆ 044 42009603.
அன்றாடம் நாம் நடந்துகொள்ளும் விதத்திலும், நமது பழக்க வழக்கங்களிலும், பேசும் வார்த்தைகளிலும், உணரும் விதத்திலும் இருக்கிறது நம் வெற்றி என்கிறார் நூலாசிரியர்.
இவர் ஏராளமான சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ளார். ஒரு விஷயத்தை வாசகனுக்குப் புரியவைப்பதில் உள்ள உத்தியை கச்சிதமாகத் தெரிந்தவர் இந்நூலாசிரியர். அதையே இந்நூல் காட்டுகிறது.
மொத்தம் 20 தலைப்புகளில் கட்டுரைகள் கொண்டு விரியும் இந்த நூலில் அந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு புராணக் கதையோ, வரலாற்று நிகழ்வோ, விளையாட்டின் சாதனையோ, நகைச்சுவைக் கற்பனை என்று சொல்ல வந்த கருத்தை வெகு எளிதாக வாசகன் புரியும்படிச் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர்.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வு குறித்து நாம் இதுவரை அணுகிய கோணம் என்ன? அப்படி அணுகியதால் நமக்குக் கிடைத்தது என்ன? அதை இனி எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவான பாதையைக் காட்டுகிறது இந்த நூல்.
முக்கியமாக, உணர்ச்சிவசப்படலின் காரணமாக மனிதன் அடையும் தோல்விகள் குறித்து அதிகம் பேசுகிறார் ஆசிரியர். பதற்றமான சூழலில் நாம் சொல்லும் வார்த்தைகள்கூட அபாயகரமான முடிவுகளைக் கொடுத்து நமக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய வெற்றியை தள்ளிச்சென்று
விடும் என்பதைத்தான் அதிகமாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
மொத்தத்தில் இந்த நூலை வாசித்து முடிக்கும்போது நமக்கு வரும் உணர்வு என்னவென்றால், வெளி உலகில் நடக்கும் எந்தச் சம்பவமும்,
நம்மைப் பாதிக்காவண்ணம் நம் மனதைக் காத்துக்கொண்டோமானால், எந்தச் சூழலையும் நாம் கையாண்டு வெற்றி வாகை சூடமுடியும் என்பதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.