முகப்பு
நூல் அரங்கம்

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

இந்த நூலில் ரோமானிய சிந்தனையாளர் செனகாவை, வள்ளுவருடன் இணைத்துப் பார்த்து, வரலாற்று அடிப்படையில் வள்ளுவரின் செல்வாக்கை நிறுவுகிறார்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 1:16 PM
- SWAMINATHAN
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 1:14 PM

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம் - பேராசிரியர் ப.மருதநாயகம்; பக்.272; ரூ.200; உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம், டாக்டர் எம்ஜிபி கலை அறிவியல் கல்லூரி வளாகம், கோவை - 641 048.

தமிழ் இலக்கிய மரபில் முக்கிய நூலாக திருக்குறளை மதிப்பிடும் பேராசிரியர், உலக நீதி நூல்களுடன் வள்ளுவரை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார். இந்த நூலில் ரோமானிய சிந்தனையாளர் செனகாவை, வள்ளுவருடன் இணைத்துப் பார்த்து, வரலாற்று அடிப்படையில் வள்ளுவரின் செல்வாக்கை நிறுவுகிறார்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 1:14 PM

செனகாவையொத்த 'ஸ்டாயிக்' தத்துவ ஆர்வலரான மார்க்கஸ் அரேலியஸ் குறித்த கட்டுரையையும், செனகாவின் கடிதங்கள், கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட்டுள்ளன. செனகாவின் எழுத்தில் காணப்படும் பல கருத்துகள், திருக்குறள் கருத்துகளுடன் வியக்கத்தகு வகையில் ஒத்திருப்பதால் வீரமாமுனிவர், ஜி.யு.போப், தனிநாயக அடிகள், தொ.பொ.மீ. ஆகியோர் திருக்குறள் குறித்து எழுதும்போது, செனகாவை இணைத்துக் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

பிரெஞ்சு அறிஞரொருவர் 16-ஆம் நூற்றாண்டில் ஈழம் குறித்த தமது நூலில், ரோமானிய அறிஞர் செனகா, திருவள்ளுவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆவணச் சான்றை அடிப்படையாகக் கொண்டு, வள்ளுவம் அவர்களுக்கு எவ்வாறோ அறிமுகமாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும் நூலாசிரியர், அதை நிறுவும் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.

ரோமானிய 'ஸ்டாயிக்' தத்துவ வரலாற்றில் ஏற்பட்ட புரட்சிமிக்க மாற்றத்துக்கு, வள்ளுவம் தூண்டுகோலாக அமைந்தது என்ற வரலாற்று உண்மையை தமிழினத்தின் உட்பகைவரும் புறப்பகைவரும் எளிதில் ஏற்கமாட்டார்கள்; ஆயினும், அதை நிலைநாட்ட தொடர்ந்து ஆய்வு செய்தல் வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.