எட்டுத் தொகையில் அறம்-புலவர் ச.ந.இளங்குமரன், பக்.112; ரூ.200; வையைப் பதிப்பகம், நாகலாபுரம், தேனி மாவட்டம் - 625 534, ✆ 98423 70792.
சங்க இலக்கியங்களில் ஈடு இணையற்ற படைப்பு எட்டுத்தொகை. இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் காதல், வீரம் குறித்து பேசுகின்றன.
'இலக்கியங்களில் அறக்கோட்பாடும் உலகப் பார்வையும்', 'அறத்தின் தோற்றம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்', 'செல்வத்துப் பயனே ஈதல்' என்ற தலைப்புகளில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
தொடர்ந்து நற்றிணையில் பேசப்படுகிற அறநெறிகள், குறுந்தொகையில் அறநெறிகளின் நன்மைகள், ஐங்குறுநூறில் அறநெறிகளின் நுட்பங்கள், பதிற்றுப்பத்தில் அறநெறிகள், பரிபாடல் பேசும் அறிநெறிக் குறிப்புகள், கலித்தொகை காட்டும் அறநெறிகள், அகநானூறில் பொதிந்துள்ள அக அறக்கோட்பாடுகள், புறநானூற்றில் அறவியல் கோட்பாடுகள் ஆகிய தலைப்புகளில், பல்வேறு பாடல்கள் மூலம் நூலாசிரியர் அறத்தை விளக்கியுள்ளார்.
அகப்பாடல்களில் விருந்தோம்பல், தலைவன் - தலைவி அறப்பண்புகள், பிரிவின் அன்பு மிகுதி, பரத்தையர் உறவைக் கண்டித்தல், இயற்கை மற்றும் தாவரங்களின் மீதான அற உணர்வு, குறிப்பாக, "செம்புலப் பெயல் நீர்போல்' என்ற உவமை, தலைவன் பிரிவில் தலைவியின் பாடுகள், அறங்கள், அறத்தோடு நிற்றல் என்று சமூகத்தின் பலமான கட்டமைப்புகள் கூறப்பட்டுள்ளன.
செங்கோன்மை அறம், போர் அறம், கொடைத்தன்மை, கல்வியின் முக்கியத்துவம், அறம் சார்ந்த சமுதாயக் கட்டுப்பாடு போன்றவை தமிழ்ச் சமூகத்தின் மறவியல் உயரிய நோக்கங்களாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.