SWAMINATHAN
நூல் அரங்கம்

வயதை வெல்லும் வாலிபர்கள்

கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், மனநல ஆலோசகர், தலைமைப் பண்புப் பயிற்சியாளர், இசைப்பிரியர், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மையோடு இயங்கும் நூலாசிரியரின் 16-ஆவது நூல் இது.

தினமணி செய்திச் சேவை

வயதை வெல்லும் வாலிபர்கள்-பால சாண்டில்யன்; பக்.246; ரூ.220; குவிகம் பதிப்பகம், சென்னை-600 078, ✆ 89396 04745.

கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், மனநல ஆலோசகர், தலைமைப் பண்புப் பயிற்சியாளர், இசைப்பிரியர், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மையோடு இயங்கும் நூலாசிரியரின் 16-ஆவது நூல் இது.

அறுபது வயதைக் கடந்து, தன்னலம் கருதாது பொதுநலத்தோடு பெருவாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் 60 வயதைக் கடந்த 50 பேரின் மனித நேயமிக்க சாதனைகளை நூலாக்கியுள்ளார். இவர்களில் 12 பேர் பெண்கள்.

காலில் உள்ள குறைபாட்டைக் காட்டிக்கொள்ளாமல் சமூகப் பணிகளில் ஈடுபடும் ஜின்னாவும், தந்தைக்கு சளைக்காமல் ஆதரவற்றோரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் அவரது மகனின் சேவையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தனது ஓய்வூதியத்தைப் பள்ளிக் கட்டடம் கட்ட அளித்த பார்வையற்றோருக்கு வாசித்துக் காட்டும் 'ஸ்க்ரை'பாக இருக்கும் சரோஜா மகாதேவன், 200 ஆதரவற்றோருக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்த 'கல்வி வள்ளல்' முத்துக்குமாரசாமி, அபாகஸ் கல்வி முறையைக் கொண்டு வந்த வசந்தி ரங்கநாதன், முதியோர்களுக்கு உதவும் என்.ஆர்.சம்பத், இலவசக் கல்வி அளித்த கவிஞர் ராசி அழகப்பன் என ஒவ்வொருவரும் சாதனைகளின் நாயகர்கள்தான்.

திருப்பூர் கிருஷ்ணன், லேனா தமிழ்வாணன், அபஸ்வரம் ராம்ஜி, யோகா, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வாசுகி கண்ணப்பன், 'மக்கள் குரல்' ராம்ஜி, 'இசைக்கவி' ரமணன், எழுத்தாளர்கள் என்.சி. மோகன்தாஸ், பட்டுக்கோட்டை பிரபாகர், கிரிஜா ராகவன், தேவிபாலா, சாந்தா தத், புலவர் தி.வே. விஜயலட்சுமி, டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன் உள்ளிட்டோரின் சாதனைகள், சேவைகள், தொண்டுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: இலங்கைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

பெண்களையும் இளைஞர்களையும் நம்புகிறேன்: மு.க. ஸ்டாலின்

மோகன்லால் - 367 திரைப்பட இயக்குநர் அறிவிப்பு!

ஆன்மிக தொடரில் அறிமுகமாகும் விஜய் - அஜித் பட நாயகி!

திமுக மகளிரணி மாநாடு தொடங்கியது!

SCROLL FOR NEXT