முகப்பு
நூல் அரங்கம்

விதைகள் உறங்காது (சேலம் மண்வாசனை)

கன்னியாகுமரி மாவட்ட 'அக்கானி'யை எழுதியவர் சேலம் மாவட்ட வாழ்வை மையமிட்டு, 'ஒற்றைப்பனை' எனும் சிறுகதையை எழுதியிருக்கிறார்.

Updated On : 9 மார்ச் 2026, 12:51 pm IST
பகிர்:

விதைகள் உறங்காது (சேலம் மண்வாசனை) - இலா.வின்சென்ட்; பக்.160; ரூ.180; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 94445 67935.

கன்னியாகுமரியைப் பூர்விகமாகக் கொண்ட நூலாசிரியர், பல ஆண்டுகளுக்கு முன்பே சேலத்துக்கு இடம்பெயர்ந்து விட்டார். கன்னியாகுமரி மாவட்ட வழக்குமொழியில் இவர் எழுதிய 'அக்கானி' எனும் நாவல் பனையேறிகளின் வாழ்வையும், மார்க்சிய இயக்கங்களின் செயல்பாட்டையும் ஒன்றிணைத்து எழுதப்பட்டது. சேலத்து வரலாற்றை வெளிப்படுத்தும் நோக்கில் சிறுகதைகளாகவே இந்த நூலை எழுதியுள்ளார். இந்தத் தொகுப்பில், 18 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சேலத்து மணம்வீசும் கதைகளின் பேச்சு வழக்கும், பாத்திரப் பெயர்களும் கிராம வாழ்வியலைப் பொருந்தியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட 'அக்கானி'யை எழுதியவர் சேலம் மாவட்ட வாழ்வை மையமிட்டு, 'ஒற்றைப்பனை' எனும் சிறுகதையை எழுதியிருக்கிறார்.

Advertisement

Advertisement

'ரவுக்கெ', 'அழுத்தும் கனவுகள்', 'சிறைச்சுடுகாடு', 'நல்லுப்பட்டு', 'இன்னதென்று அறியாமலே', 'மீண்டெழுதல்', 'பகுபதம்', 'மருந்தென வேண்டாவாம்', 'இரண்டு ஓநாய்களும் ஒரு நாயும்', 'இறுதிக் காட்சி', 'வீரம் என்பது...', 'உயிர்த்தாகம்', 'ஆறாத வடு', 'ஆத்தா... ஆத்தா...', 'வரம் கேட்டு வந்தவள்', 'ஷகிதா பானு', 'மனிதம் சாகுமோ?' உள்ளிட்ட 18 சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன.

நெசவாளர்களின வாழ்க்கை, பிரத்யேக பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் ஜாதிகளின் வாழ்க்கை முறைகள், பழைய வாழ்வியல் முறைகளுக்கும் நவீன வாழ்வியல் முறைகளுக்கும் இடையேயான ஒப்பீடு, நவீன குடும்ப அமைப்பு மீதான ஒவ்வாமை என்று இந்தச் சிறுகதைகளில் பலதரப்பட்ட சிந்தனைகள் வெளிப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.