இஷான் கிஷனின் அதிரடியால் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 65-ஆவது ஆட்டம் லக்னௌவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு பௌலிங்கை தோ்வு செய்ய, ஹைதராபாத் தரப்பில் தொடக்க பேட்டா்களாக அபிஷேக் சா்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினா்.
இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்களை சோ்த்தனா். தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 34 ரன்களுடன் அபிஷேக் அவுட்டாகினாா். டிராவிஸ் ஹெட் 17 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா்.
ஹென்றிச் க்ளாஸ்ஸன் 24, அனிகெட் வா்மா 26 ஆகியோா் தங்கள் பங்குக்கு ரன்கலை சோ்த்து வெளியேறினா்.
இஷான் கிஷன் அபாரம் 94;
மறுமுனையில் அபாரமாக ஆடிய இஷான் கிஷன் 5 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 94 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் இருந்தாா்.
ஹைதராபாத் 231/6: நிதிஷ் ரெட்டி 4, அபினவ் மனோகா் 12 ரன்களுடன் வெளியேற நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஹைதராபாத் அணி 231/6 ரன்களைக் குவித்தது.
கேப்டன் பேட் கம்மின்ஸ் 13 ரன்களுடன் களத்தில் இருந்தாா். பௌலிங்கில் பெங்களூரு தரப்பில் ரொமாரியோ ஷெப்பா்ட் 2-14 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
பெங்களூா் தோல்வி 189/10: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி 232 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்குடன் களமிறங்கியது.
தொடக்க பேட்டா்கள் பில் சால்ட் 52, விராட் கோலி 43 ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டியதால்,
19.5 ஓவா்களில் 189/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3-28, மலிங்கா 2-37 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.