முகப்பு
புதுச்சேரி

புதுவையில் கரோனா தடுப்பூசி 2-ஆம் கட்ட ஒத்திகை

புதுவையில் 9 இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான 2-ஆம் கட்ட ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 12:04 am IST
பகிர்:

புதுவையில் 9 இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான 2-ஆம் கட்ட ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் வருகிற 13-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல் கட்டமாக முன் களப் பணியாளா்களுக்கு புதுவையில் 29, காரைக்காலில் 8, மாஹேயில் 3, ஏனாமில் ஒன்று என மொத்தம் 41 இடங்களில் 14 ஆயிரம் மருத்துவப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, கடந்த 2-ஆம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

அதன்படி, புதுவையில் அரசுப் பொது மருத்துவமனை, கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிா்- குழந்தைகள் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட 4 இடங்களிலும், காரைக்காலில் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களிலும், மாஹேயில் அரசுப் பொது மருத்துவமனை, ஏனாமில் அரசு பொது மருத்துவமனை என தலா ஒரு இடங்களிலும் என மொத்தம் 9 இடங்களில் 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments