பெண்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.சி.ஐ மற்றும் இன்ஸ்பயர்
புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.சி.ஐ மற்றும் இன்ஸ்பயர் டெக்னாலஜிஸ் சார்பில் வேலைவாய்ப்புத் திறன் வளர்த்தல் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தேனி ஜே.சி.ஐ. மண்டல பயிற்றுனர் முனைவர் கீதா, ஜே.சி.ஐ கிங்ஸ் தலைவர் கே. சேதுரத்தினம், இன்ஸ்பயர் டெக்னாலஜிஸ் என். பிரபு, முன்னாள் ஜே.சி.ஐ சங்கமம் தலைவர் கோமதிசங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் வீ. வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் தொடக்கி வைத்தார்.
ஏற்பாடுகளை ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் வி. ரம்யா செய்திருந்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.