முகப்பு
ஆன்மிகம்

பண்பொழி திருமலைக்கோவில் தேரோட்டம்: தேருக்குப் பின் தொடர்ந்து விழுந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

இக்கோவிலின் கந்த சஷ்டி திருவிழா நவ.11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது..அன்று முதல் தினந்தோறும் காலை 9 மணிக்கும்,மாலை 6 மணிக்கும் சுவாமி ஏக சிம்மாசனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.ஞாயிற்றுக்கிழமை மாலை வண்டாடும் பொட்டலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டம்

இக்கோவிலில் முருகன்,குமரனாக எழுந்தருளியுள்ளதால்,இக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி கிடையாது.அதனால் இங்கு திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.திங்கள்கிழமை காலை மலையிலிருந்து,குமரன் தேருக்கு எழுந்தருளும் வைபமும்,தொடர்ந்து வண்டாடும் பொட்டலில் தேரோட்டமும் நடைபெற்றன.இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பிடு சரணம்

திருமலைக்குமரனை வேண்டிக்கொண்டால்,அனைத்து விதமான நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இப்படி நேர்ந்து கொண்டவர்கள்,தேருக்கு பின்னால் தொடர்ந்து தரையில் விழுந்து வணங்கியவாறே தங்களின் நேர்த்திக்கடனை(கும்பிடு சரணம்) செலுத்துவது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்திலும்,ஏராளமான பக்தர்கள் தேருக்கு பின்னால் தரையில் விழுந்து வணங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மு.கார்த்திக், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ருணாசலம், துரைப் பட்டர், ரமேஷ் பட்டர், ஹரி பட்டர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர். மண்டகப் படிதாரர்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →