முகப்பு
ஆன்மிகம்

பழனி அருகே உலக நலனை முன்னிட்டும் மழை வேண்டியும் சண்டி ஹோமம்

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் கடும்வறட்சி ஏற்பட்டுள்ளது.  இருபோகம் விளையும் வயல்களில் ஒருபோகம் கூட பயிர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் பழனியை அடுத்த அ.கலையமுத்தூர் அக்ரஹாரத்தில் ஸ்ரீஅழகுநாச்சியம்மனுக்கு உலகநலன், மழைவேண்டி இரண்டு நாள் சண்டிஹோமம் நடைபெற்றது. 

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:30 AM
பகிர்:

பழனி அருகே உலக நலன், மழை வேண்டி ஸ்ரீஅழகுநாச்சியம்மனுக்கு சண்டிஹோமம் நடைபெற்றது.

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் கடும்வறட்சி ஏற்பட்டுள்ளது.  இருபோகம் விளையும் வயல்களில் ஒருபோகம் கூட பயிர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் பழனியை அடுத்த அ.கலையமுத்தூர் அக்ரஹாரத்தில் ஸ்ரீஅழகுநாச்சியம்மனுக்கு உலகநலன், மழைவேண்டி இரண்டு நாள் சண்டிஹோமம் நடைபெற்றது. 

ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முதல்நாளான சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடத்தப்பட்டு திருவோணதீபம் ஏற்றப்பட்டது.  தொடர்ந்து சிறப்பு சண்டிஹோமம் நடத்தப்பட்டது.  பிரமாண்டமான யாககுண்டம் வளர்க்கப்பட்டு யாககுண்டத்தில் சாத வகைகள், மலர்கள், பழங்கள் இடப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது. 

பூர்ணாஹுதியில் பல்வேறு வகையான மூலிகை பொருட்கள், தானியங்கள் இடப்பட்டது.  அன்று மாலை ஸ்ரீகல்யாணி அம்மன், கைலாசநாதர் கோயிலில் விசேஷ வழிபாடு நடத்தப்பட்டது.  இரவு அக்ர்ஹாரம் பஜனை குழுவினரின் நாமசங்கீர்த்தனம், ஸ்ரீஆஞ்சநேயர் வடைமாலை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  விழாவில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடுகள் மேற்கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர். 

யாகத்துக்கான ஏற்பாடுகளை கலையம்புத்தூர் அக்ரஹாரம் ஸ்ரீஆத்ரேய கோத்ராதிகள் சங்கத்தின் தலைவர் மீனாட்சிசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் சந்தானகிருஷ்ணன், பொருளாளர் நவநீத் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், டிஎஸ்பி., சண்முகசுந்தரம், ஊராட்சி தலைவர் சுப்ரமணியம், நிர்வாகக் குழு வெங்கடகிருஷ்ண வாத்தியார்,சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை திருமஞ்சனத்தைத் தொடர்ந்து அக்ரஹாரத்தில் இருந்து ஊற்சவரை ஸ்ரீஅழகுநாச்சியம்மன் ஆலயத்துக்கு எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.