சிதம்பரம் ஸ்ரீபாண்டிய நாயகம் கோயில் தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நடராஜர் கோயில் வடக்குகோபுரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாகம் கோயில் பங்குனி உத்தர திருவிழா கடந்த மார்ச் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதிஉலா வந்தது. ஏப்.2-ம் தேதி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கீழரதவீதியில் உள்ள தேரடி நிலையில் உள்ள தேரில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசண்முகசுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். பின்னர் நான்கு வீதிகள் வலம் வந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏப்.3-ம் தேதி சிவகங்கை தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இக்கோயில் திருப்பணிக்காக கடந்த 10 வருடங்களாக இடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தஆண்டுதான் திருப்பணிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.