முகப்பு
ஆன்மிகம்

சிஷ்ய ஸ்வீகாரம்

கங்கையும், துங்கையும் தீர்த்தங்களில் பெருஞ்சிறப்பு வாய்ந்தவை. இதில், துங்கா நதி கர்நாடக

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

கங்கையும், துங்கையும் தீர்த்தங்களில் பெருஞ்சிறப்பு வாய்ந்தவை. இதில், துங்கா நதி கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருங்ககிரியில் அமைதியாக ஓடுகிறது. தசரச சக்கரவர்த்திக்கு 'புத்திர காமேஷ்டி யாகம்' செய்வித்த ரிஷ்ய சிருங்கர் பல்லாண்டு தவம் புரிந்த தலமாக இது விளங்குவதால் ஒரு காலத்தில் 'ரிஷ்ய சிருங்கபுரம்' என்றழைக்கப்பட்டது பின்னாளில் 'சிருங்ககிரி' என்றும் 'சிருங்கேரி' என்று மருவியது. கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதையின் திருத்தலம் இது. ஆதி சங்கரர் அத்வைதத்தைப் பரப்ப நிர்மாணித்த நான்கு பீடங்களில் தலையாய ஸ்ரீ சாரதா பீடத்தை சிருங்ககிரியில் நிறுவினார். நான்கு சீடர்களுடன் பன்னிரு ஆண்டுகள் தவமும், வேத ஆய்வும் புரிந்து துங்கா நதி தீர்த்தத்தை மேலும் புனிதமாக்கினார்.

சிருங்ககிரி ஸ்ரீ சாரதாபீடத்தின் ஜகத் குருக்கள் ஆதிசங்கரர், சுரேஸ்வரர் என 35 குருமார்களைத் தொடர்ந்து இன்று அருளாட்சி புரிபவர் 36வது பீடாதிபதி பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளாவார். ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சந்நிதானங்கள் எல்லோருமே தவச்சக்கரவர்த்திகள் என்று வர்ணிக்கப்படுவார்கள். தற்போது இந்த குரு பரம்பரையில் 37வது பீடாதிபதியாக ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத் சர்மா என்ற இளவயது பிரும்மச்சாரி பொறுப்பேற்க உள்ளார்கள். இந்த சிஷ்ய ஸ்வீகார நியமணத்திற்கான புனித விழா முறைப்படி ஜன 22, 23 தேதிகளில் சிருங்கேரியில் கோலாகலமாக நடைபெறுகின்றது. ஜன 23ம் தேதி முக்கிய நிகழ்வுகள் துங்கா நதிக்கரையிலும், ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

ஐய வருஷம் மாக சுக்ல த்விதீயை வியாழக்கிழமை 22-01-2015

காலை 8 மணி முதல்

குருதர்சனம், மஹாகணபதிஹோம பூர்ணாஹுதி, ஸ்ரீமடத்தின் எல்லா ஆலயங்களிலும் தர்சனம், நரஸிம்ஹவனத்தில் அதிஷ்டான மந்திரத்தில் ஸந்யாஸ ஸ்வீகாரத்தின் பூர்வாங்க நிகழ்ச்சிகள், க்ருச்ராசரணம், அஷ்டச்ரார்த்தம் முதலானவை.

மாலை: ப்ரஹ்மான்வாதானம்

இரவு: ஜாகரணம்

ஜய வருஷம் மாக சுக்ல த்ருதீயை வெள்ளிக்கிழமை 23-01-2015

காலை 7.30 மணி முதல்

புருஷஸூக்த ஹோமம், விரஜாஹோமம்:

துங்கா நதியில் ப்ரேஷோச்சாரண பூர்வக ஸர்வபூத அபயப்ரதானம், "காஷாயவஸ்த்ரம், தண்டம், கமண்டலு" ஆகியவற்றை ஜகத்குரு மஹாஸ்வாமிகள் அனுக்ரஷம் செய்தல், அதிஷ்டான மந்திரத்தில் ப்ரணவ உபதேசம், மஹாவாக்ய உபதேசம், துங்கா நதியின் வடகரையில் பர்யங்கசௌசம். ஸ்ரீசாராதாம்பாள் ஆலயத்தில் வ்யாக்யான ஸிம்ஹாஸனத்தில் யோகபட்டம் வழங்குதல், குருபூஜை சிஷ்ய மஹாஜனங்களின் பழம்-புஷ்பம்-காணிக்கை சமர்ப்பணம், குரு சிஷ்யர் இருவரும் ஆலய தர்சனம் செய்தல்.

மாலை 5 மணி முதல்

மஹாஸபை, ஜகத்குரு மஹாஸ்வாமிகளின் அருளுரை, பண்டிதர்களுக்கு சன்மானம்.

இரவு 9 மணி முதல்

குரு சிஷ்யர் இருவரின் பல்லாக்கு உத்ஸவம்.

பட உதவி: http://www.sringeri.net/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.