ஆன்மிகம்

ஏழரைச்சனி குழந்தைகளை எந்த விதத்தில் பாதிக்கும்? 

தினமணி

உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்கு அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். அதாவது, முந்தைய ராசியில் இரண்டரை  வருடம், அந்த ராசியில் இரண்டரை வருடம், பிந்தைய ராசியில் இரண்டரை வருடம் ஆக மொத்தம் ஏழரை வருட காலத்தை ஏழரைச்சனி என அழைக்கின்றோம். 

சிவபெருமானையும் விட்டுவைக்காத சனிபகவான், குழந்தைகளை மட்டும் விட்டுவிடுவாரா என்ன? அவரவரின் வயதுக்கு ஏற்றவாறு பலாபலன்களை கட்டாயம் வழங்கியே தீருவார் சனிபகவான். 

ஏழரை சனியின் போது சனி, பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார். அந்தச் சமயத்தில் ஏழரை சனியால் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும் வாழ்க்கை முழுவதும் மறக்கா முடியாதபடி இருக்கும். குழந்தைகளுக்கு ஏழரைச்சனி நடக்கும்போது என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.

குழந்தைகளுக்கு ஏழரைச்சனி நடக்கும்போது அவர்களின் உடல்நலம் பாதிப்படையும். அதனால், அதிகப்படியான மருத்துவச் செலவுகள் ஏற்படும். மேலும் குழந்தைகள் படும் சிரமத்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மனக்கவலை உண்டாகும். இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல், இலகுவாக நடத்துவது நல்லது. இல்லையெனில், அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல்நலக்குறைவு உண்டாகும்.

10 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிக பிடிவாத குணத்துடனும், படிப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாகவும், கெட்ட பெயரை எடுக்கும்படியான சூழலையும் ஏற்படுத்துவார் சனிபகவான். எனவே, குழந்தைகளுக்கு ஏழரைச்சனி நடக்கும்போது அவர்களை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிச் செய்தால் இதுதான் ரிசல்ட் என்று பொறுமையாகவும், அன்பாகவும் எடுத்துக்கூறி அவர்களுக்குப் புரிய வைக்கலாம்.

இவ்வாறு ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள நவக்கிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது, காக்கைக்கு சாதம் வைப்பதும் செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT