ஆன்மிகம்

பரிகாரம் செய்ய ஏற்றக் காலம் எது?

ஒருவருடைய ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ அதை நிவர்த்தி செய்து கொள்ள பரிகாரம் செய்கிறோம்.

தினமணி

ஒருவருடைய ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ அதை நிவர்த்தி செய்து கொள்ள பரிகாரம் செய்கிறோம். அவ்வாறு செய்யப்படும் பரிகாரம் சரியான நேரம், காலம் பார்த்து செய்வது உரிய பலனை கொடுக்கும்.

• பொதுவாகப் பரிகாரம் செய்பவருடைய ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது சிறப்பு. எந்தக் கிரகத்திற்கு பரிகாரம் செய்கிறோமோ அந்தக் கிரகத்தினுடைய கிழமைகளில் செய்யலாம். அமாவாசை, பௌர்ணமி திதிகளில் பரிகாரம் செய்யலாம். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பரிகாரம் செய்வது உத்தமம்.

• ஜென்ம நட்சத்திற்கு 4, 8, 12 இந்த நட்சத்திரங்களில் பரிகாரம் செய்யக் கூடாது. மழை பெய்து கொண்டிருக்கும்போது பரிகாரம் செய்யக் கூடாது. சந்தியா காலத்தில் பரிகாரம் செய்யக் கூடாது.

• நடு இரவு நேரங்களில் பரிகாரம் செய்யக் கூடாது. பொது கிரக தோஷ பரிகாரங்களை தேய்பிறையில் செய்ய வேண்டும். சூரியன் உச்சிப் பொழுதில் பரிகாரம் செய்யக் கூடாது.

பரிகாரம் செய்ய ஏற்ற இடம்:

• குளக்கரை • நதிக்கரை • கிணற்றங்கரை • கடற்கரை • அருவிக்கரை • கோ சாலை • நாயன்மார்களால் பாடல் பெற்ற சிவாலயங்கள் • ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட விஷ்ணு ஆலயங்கள் • அடியார்கள், மகான்களால் பாடம் பெற்ற அம்மன் திருத்தலங்கள் • பாடல் பெற்ற விநாயகர் ஆலயங்கள் • சித்தர்கள் சமாதி அடைந்த திருத்தலங்கள் • குரு ஆலயம் • மலை ஸ்தலங்கள் போன்ற இடங்களில் பரிகாரம் செய்வதால் பலன் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

SCROLL FOR NEXT