ஆன்மிகம்

தஞ்சாவூரில் ஆழ்துளை கிணறு தோண்டும் போது 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

தினமணி

கிணறு வெட்ட பூதம் கிளம்பியதை போல, தஞ்சாவூரில் ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது 12 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடித்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலபழஞ்சூர் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு வெட்ட 12 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. 

மேலபழஞ்சூர் கிரமத்தில் கட்டப்பட்டு வரும் சிவன் கோயிலின் பயன்பாட்டிற்காக ஆழ்துளைக் கிணறு வெட்டப் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சிவன், பார்வதி, பிள்ளையார் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. 

இதைத் தொடர்ந்து அறநிலைதுறையினர் தோண்டி வருகின்றனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூடியுள்ளனர். 

12 சிலைகளும் ஒரே இடத்தில் எப்படி வந்திருக்கும், பழங்காலத்தில் இங்கு ஏதேனும் கோயில் இருந்திருக்குமோ? புரியாத புதிராக தான் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT