ஆன்மிகம்

பொதுவாக எந்த ஹோரையில் நல்ல காரியம் செய்யலாம்?

‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். எந்த நேரத்தில் என்ன செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.....

தினமணி

‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். எந்த நேரத்தில் என்ன செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் வகைப்படுத்தியுள்ளனர். 

ஜோதிடத்தில் ஹோரை என்று குறிப்பிடுவது அந்த நேரத்தைத்தான். நாம் செய்ய விரும்பும் காரியங்களை எந்த ஓரையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை இந்த ஹோரை நேரம் நமக்கு வழிகாட்டுகிறது. 

ஹோரைகளில் சுப ஹோரைகள், அசுப ஹோரைகள் என்று எதுவும் கூற இயலாது. செய்யப்படும் காரியங்களுக்கு ஏற்ப நாம் ஹோரைகளை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். இலக்கணத்தின் அடிப்படையில் சுப ஹோரைகள் மற்றும் அசுப ஹோரைகள் அமையும்.

ஒவ்வொருவரும் அன்றாடம் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களையெல்லாம் கிரக ஹோரைகளைப் பார்த்து தொடங்குவது மிகுந்த நன்மைகளைத் தரும். தொடங்கிய வேலை திருப்திகரமாக முடியும்.

சூரிய ஹோரை :
உத்தியோகம், வியாபாரம் தொடங்க, ஒருவருடைய உதவியைக் கேட்க, உங்களுடைய மேலதிகாரிகளைச் சந்திக்க, உயில் எழுத சூரிய ஹோரை மிகவும் ஏற்றது.

சந்திர ஹோரை:
வியாபாரம் தொடங்க, திருமண விஷயங்களைப் பேச, கேள்விகள் கேட்க, பயணம் செய்ய, கப்பல் மூலம் யாத்திரை தொடங்க, நண்பர்களைக் காண இவ்வோரை ஏற்றது. ஆனால், தேய்பிறைச் சந்திரனாக இருத்தல் கூடாது.

செவ்வாய் ஹோரை:
செவ்வாய் ஹோரையில் எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பது நல்லது. நமது கருத்துக்களையும், யோசனைகளையும் மறைமுகமாக வைத்திருக்க வேண்டும். மீறி வெளியிட்டால் மிகுந்த துன்பங்களைத் தரும்.

புதன் ஹோரை:
புதன் ஹோரையில் எல்லாவிதமான எழுத்துப் பணிகளையும் செய்யலாம். தேர்வுகள் எழுதினால் வெற்றி கிட்டும். ஜோதிடம், அறிவியல் சார்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கலாம். தந்திகள் அனுப்பலாம். வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேசலாம். தாய் வழி உறவினருடன் மங்களகரமான விஷயங்களைப் பற்றிப் பேச உகந்தது.

குரு ஹோரை:
அனைத்து சுபகாரியங்களுக்கும் ஏற்றது குரு ஹோரை. குறிப்பாகத் தொட்ட காரியங்கள் தடையின்றி நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் குரு ஹோரையில் தொடங்க வேண்டும். பொருள்கள் வாங்க, உத்தியோகத்தில் சேர, பணம் சார்பான பணிகள், ஆடை, அணிகலன்களை வாங்க, பிறரிடம் கடன் வாங்க, வியாபாரம் செழிக்க இவ்ஹோரை நன்று.

சுக்கிர ஹோரை:
எல்லா மங்கள காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை இது. திருமணம் தொடர்பாக பேசவும், பிறருடைய உதவிகளைப் பெறவும், விருந்து உண்பதற்கும், பழைய கடன்களை வசூலிக்கவும், மருந்து சாப்பிடவும், புதிய வாகனங்களை வாங்கவும், மனைவியின் சுற்றத்தாரோடு சுபகாரியம் பேசவும் மிகவும் ஏற்றது.

சனி ஹோரை:
நிலம், சொத்து தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தோப்பு துறவுகளைப் பற்றி பேசுவதற்கும் ஏற்றது. பிற எந்த செயலையும் இவ்வோரையில் செய்யக் கூடாது. ஏனெனில் இவ்ஹோரை மிகுந்த துன்பம் தருவதாகும். பொதுவில் அனைத்திற்கும், அனைவருக்கும் புதன், குரு, சுக்கிர ஹோரைகள் மிகவும் நன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT