ஆன்மிகம்

மகாளய அமாவாசை: முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

தினமணி

மகாளய அமாவாசையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர். 

மூதாதையர்களுக்கு விடுபட்ட திதி, தர்ப்பணங்களுக்குப் பரிகாரமாக மகாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்தால், மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடைந்து குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலகுவதற்கு ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.

தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக காவிரி உள்ளிட்ட நதிக்கரைகளுக்கும், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைகளுக்கும் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனர். காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர். இதே போல ராமேஸ்வரம் புண்ணிய தீர்த்தத்திலும், நதிக்கரையோரங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. 

பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு எள், அரிசி, வாழைக்காய், உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்துப் படைத்தனர். பின்னர், அருகில் இருந்த நீர்நிலைகளில் மூழ்கி வழிபட்டனர். தொடர்ந்து, கோயில்களிலும் ஏராளமானோர் திதி கொடுத்து வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT