முகப்பு
ஆன்மிகம்

இறைவனை வணங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய வழிமுறைகள்

கோயில்களுக்குச் சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகளை....

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:45 PM
பகிர்:

கோயில்களுக்குச் சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

உத்தம நமஸ்காரம்
லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேர் மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்க வேண்டும். இவ்வாறு முறையாக வணங்குவதின் மூலம் இறைவன் செவிசாய்த்துக் கேட்பார் என்பது ஐதீகம்.

அஷ்டாங்க நமஸ்காரம்
இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் எட்டு; அங்கம் உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.

Advertisement

பஞ்சாங்க நமஸ்காரம்
இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்குதல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாகச் சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments