கோவிந்தா கோபாலா என்ற கோஷம் ஒலித்தபடி தொடங்கியது சிவாலய ஓட்டம்
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரி. "சிவனும் ஹரியும்" ஒன்றே என்ற இணைப்புத் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதே சிவாலய ஓட்டமாகும்.
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரி. "சிவனும் ஹரியும்" ஒன்றே என்ற இணைப்புத் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதே சிவாலய ஓட்டமாகும்.
சிவராத்திரி ஒரு நாள் முன்பு இந்த சிவாலய ஓட்டம் தொடங்குகிறது. அன்றைய தினம் பக்தர்கள் விரதம் மேற்கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்னை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்கிற 12 சிவாலயங்களை ஓடி ஓடி தரிசிப்பார்கள் பக்தர்கள் இதுவே சிவாலய ஓட்டம்!
காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுக்கு பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிற என்ற திருமலையில், ஆற்றில் நீராடி சிவனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். தொடர்ந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும் வரை "கோவிந்தா கோபாலா" என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி முதல் பாதி மனித உருவமும், கீழ் அடுத்த பாதி புலி வடிவமும் பெற்றார். அவருக்கு விஷ்ணுவைப் பிடிக்காதாம். அவருக்கு உணர்த்தும் விதமாகக் கிருஷ்ண பகவான் புரிந்த லீலையே இந்த சிவாலய ஓட்டமாகும்.
சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசியன்று மாலை அணிந்து அன்று விரதத்தைத் தொடங்குவார்கள். சிவராத்திரிக்கு முன்தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி ஆடையை அணிந்து புறப்படுவார்கள். கோவிந்தா...கோபாலா என்று கோஷமிட்டுக் கொண்டே திருமலையில் இருந்து சிவாலய ஓட்டத்தைத் தொடங்குவார்கள். இப்படியாக ஓடிக்கொண்டே 12 சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்.