ஆன்மிகம்

இன்று வில்வ தளத்தை பறிக்கக்கூடாது ஏன்? 

இன்றைய தினம் வில்வம் பறித்து சிவபெருமானுக்கு சாத்தலாமா? என்றால் கட்டாயம்....

தினமணி


இன்று திங்கட்கிழமையன்று திரயோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாளில் வரும் மாபெரும் பிரதோஷம்.

இது, பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தை மாத சோமவார பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்து வழிபட்டால், வாழ்வில் தடைகளையெல்லாம் தகர்ந்துவிடும்.

இன்றைய தினம் வில்வம் பறித்து சிவபெருமானுக்கு சாத்தலாமா? என்றால் கட்டாயம் பறிக்கக்கூடாது. ஏன் இன்று வில்வ தளத்தை பறிக்கக் கூடாது என்று பார்ப்போம். 

வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். ஒரு வில்வ தளம் லட்சம் தங்க மலர்களுக்கு சமமாகும். ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணித்தாலும் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகுமாம். அவ்வளவு மகிமை வாய்ந்த வில்வ தளத்தை சில நாட்களில் பறித்தால் பாவம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

எந்த நாட்களில் வில்வ தளத்தை பறிக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்......

மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. பிரதோஷம் அன்றும் வில்வத்தைப் பறிக்காமல், முன்கூட்டியே பறித்து வைத்து உபயோகிக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக கூட்டம்: தொண்டர்களின் பாதுகாப்புக்காக முள் கம்பி சுற்றப்படும் - செங்கோட்டையன்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு மத்தியில் பொறியியல் ஏற்றுமதி 23.7% உயர்வு!

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.90.74 ஆக நிறைவு!

இந்தியாவின் மிக மெலிதான ஸ்மார்ட்போன்! மோட்டோ எட்ஜ் 70 அறிமுகம்!

SCROLL FOR NEXT