ஆன்மிகம்

நவத்திருப்பதி கோவில் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு பயணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவத்திருப்பதி கோயில்களில் உள்ள யானைகள் புத்துணர்வு முகாமிற்கு இன்று அழைத்துச் செல்லப்படுகிறது. 

நவத்திருப்பதி கோவில்களுக்கு உட்பட்ட  ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் யானை ஆதிநாயகி, திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் யானை குமுதவல்லி, இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோவில் யானை லட்சுமி ஆகியவை கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு இன்று காலையில் ஆழ்வார்திருநகரியில் இருந்து யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி ஆணையர்கள்  ரத்தினவேல் பாண்டியன், ரோசாலி,  ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் செயல் அலுவலர் பொன்னி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார், கோவில் ஆய்வாளர்கள் திருச்செந்தூர் முருகன், ஸ்ரீவைகுண்டம் நம்பி,  முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, பாகன்கள் கரீம் பாலன், சிராஜ்தீன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT