ஆன்மிகம்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நாளை ஒரு நாள் மட்டும் அனுமதி!

தினமணி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களுக்கு மட்டும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.

இந்நிலையில், மார்கழி முதல்நாளை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது. 

மேலும், நாளை காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT