ஆன்மிகம்

காமாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.35.25 லட்சம்

தினமணி


காமாட்சியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டதில் ரூ.35.25 லட்சம் காணிக்கை வசூலானது. 
காஞ்சிபுரம் உள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். 
அவர்கள் கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த  உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி,  அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் ஸ்ரீகார்யம் ஏஜென்ட் விஸ்வநாத சாஸ்திரி, அறநிலையத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் புதன்கிழமை காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ரூ.35 லட்சத்து 25 ஆயிரத்து 626-ம், 205 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளியும் வசூலானதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT