ஆன்மிகம்

கைசிக துவாதசி: உக்கிர ஸ்ரீநிவாச மூர்த்தி மாட வீதிகளில் உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி சுவாமி உக்கிர ஸ்ரீநிவாச மூர்த்தி மாட வீதிகளில் உலாவரும் வைபவம் நடைபெற்றது.

தினமணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி சுவாமி உக்கிர ஸ்ரீநிவாச மூர்த்தி மாட வீதிகளில் உலாவரும் வைபவம் நடைபெற்றது. 

ஆடி மாத சுக்ல ஏகாதசியில் சயன கோலத்தில் செல்லும் மகாவிஷ்ணு கார்த்திகை மாத கைசிக துவாதசியன்று சயன கோலத்தில் இருந்து எழுவதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. 

அதை வரவேற்கும் வகையில் கோயிலில் உள்ள பஞ்ச மூர்த்திகளில் ஒருவரான உக்கிர சீனிவாசமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் உலா வந்தார். 

இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உக்கிர ஸ்ரீநிவாச மூர்த்தியை தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT