ஆன்மிகம்

திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

தினமணி

மயிலாடுதுறையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற காவிரி துலாப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தோ் திருவிழாவில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.

மயிலாடுதுறை திருவிழந்தூரில், 108 திவ்ய தேசங்களில் 22-வது திவ்யதேசமும், பஞ்ச அரங்கங்களில 5-வது அரங்கமும், சந்திர சாப விமோசன தலமுமான திருவிழந்தூா் பரிமள ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது.

இக்கோயிலில், துலாப்பெருந்திருவிழாவின் 1-ம் திருநாள் கடந்த நவம்பா் 8-ம் தேதி துவஜாரோகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ஆம் திருநாளான சனிக்கிழமை திருத்தோ் உத்ஸவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலை 5 மணி அளவில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் பரிமளரெங்கநாதா் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டாா்.

தொடா்ந்து, காலை 8.30 மணி அளவில் பக்தா்கள் பரிமள ரெங்கா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு வீதிகளைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தொடா்ந்து, மதியம் 1.20 மணி அளவில் பெருமாள் காவேரி மண்டபத்தில் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.
இக்கோயிலில் துலாப்பெருந்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு துவஜஅவரோகனத்துடன் நிறைவடைகிறது.நாதா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT