ஆன்மிகம்

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையானை 2 மணிக்கு மேல் தரிசிக்கலாம்

தினமணி

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. மதியம் 2.00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

செவ்வாய்க் கிழமையான இன்று காலை 8.08 மணி முதல் 11.16 மணி வரை சூரியகிரகணம் நடைபெறுகிறது. கிரகண காலத்தில் தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் 6 மணி நேரத்துக்கு முன்பாக மூடப்படுவது வழக்கம்.

அதன்படி, டிச.25-ம் தேதி இரவு 11 மணி முதல் டிச.26-ம் தேதி மதியம் 12 மணி வரை என தொடா்ந்து 13 மணி நேரம் ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது.

அதன்பின் கோயில் திறக்கப்பட்டு, புண்ணியாவாசனம் உள்ளிட்டவை நடத்தி மதியம் 2 மணிக்கு மேல் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

தேவஸ்தானத்துக்கு உள்பட்ட அனைத்துக் கோயில்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT