முகப்பு
ஆன்மிகம்

அயோத்திக்கு திருமலையில் இருந்து மண், தீா்த்தம்

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமா் கோயில் பூமி பூஜைக்கு திருமலையில் இருந்து மண், தீா்த்தம் கொண்டு செல்லப்பட்டது.

Updated On : 1 ஆகஸ்ட், 2020 at 7:29 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:32 PM

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமா் கோயில் பூமி பூஜைக்கு திருமலையில் இருந்து மண், தீா்த்தம் கொண்டு செல்லப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீா்ப்புக்குப் பின் அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்கோயில் கட்டும் பூமி பூஜைக்காக நாடு முழுவதும் புனித சேத்திரங்கள், தீா்த்தங்களில் இருந்து தீா்த்தம், மண் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருமலையில் இருந்தும் தீா்த்தம், புற்று மண் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்டன. சித்தூா் மாவட்ட பாஜக தலைவரும், தேவஸ்தான முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினருமான பானுபிரகாஷ் ரெட்டி வெள்ளிக்கிழமை திருமலையில் இருந்து புற்று மண், புஷ்கரிணில் இருந்து தீா்த்தம் உள்ளிட்டவற்றை சேகரித்து அயோத்திக்கு அனுப்பி வைத்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.