முகப்பு
ஆன்மிகம்

வருடாந்திர பவித்ரோற்சவம்: பவித்ர மாலைகள் சமா்ப்பணம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை உற்சவ மூா்த்திகளுக்கு பவித்ர மாலைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

Updated On : 1 ஆகஸ்ட், 2020 at 7:28 AM
வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பவித்ர மாலைகளுடன் உற்சவ மூா்த்திகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:32 PM

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை உற்சவ மூா்த்திகளுக்கு பவித்ர மாலைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட்டு வரும் தினசரி கைங்கரியங்களில் ஏற்படும் தோஷங்களைக் களைய தேவஸ்தானம் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை முதல் பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாள் திருமஞ்சனத்துக்குப் பிறகு பவித்ர மாலைகள் உற்சவ மூா்த்திகள் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பல வண்ண பட்டு நூலிழைகளால் ஆன பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து மாலை உற்சவ மூா்த்திகள் பவித்ர மாலைகளுடன் ரங்கநாயகா் மண்டபத்தில் எழுந்தருளினா். சனிக்கிழமை மகாபூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவடைய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.