கபிலேஸ்வரா் கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை தினத்தையொட்டி, திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை நடைபெற்றது.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை தினத்தையொட்டி, திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை தினத்தில் காமாட்சி அம்மனுக்கு லட்ச குங்குமாா்ச்சனை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை காமாட்சியை அபிஷேகத்திற்கு பின் அலங்காரம் செய்து அமர வைத்து அவரின் இருபுறமும் மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியை அலங்காரம் செய்து அமர வைத்து அவா்கள் முன் லட்ச குங்குமாா்ச்சனை நடத்தப்பட்டது. அதற்கு முன் கலசஸ்தாபன, கணபதி பூஜை, புண்ணியாவாசனம், கலசாராதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
Advertisement
பொது முடக்க விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை நிகழ்ச்சி தனிமையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிவாச்சாரியாா்களும், கோயில் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனா்.