பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
இந்தியப் பங்குகளை விற்பனை செய்து தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.
அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலமை உள்ளிட்டவையால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியப் பங்குகளை தொடர்ந்து விற்பனையை செய்து வருகின்றனர்.
ஏப்ரல் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் அவர்கள் சுமார் ரூ. 48,213 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்று, வரலாறு காணாத வெளியேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த விற்பனையானது, மார்ச் மாதத்தில் பதிவான ரூ. 1.17 லட்சம் கோடி என்ற சாதனை வெளியேற்றத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பிப்ரவரி மாதம் ரூ. 22,615 கோடியை முதலீடு செய்திருந்த நிலையில், இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சமீபத்திய விற்பனையைத் தொடர்ந்து, 2026ல் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மொத்தமாக ரூ. 1.8 லட்சம் கோடி அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.
என்.எஸ்.டி.எல் தரவுகளின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து ரூ. 48,213 கோடி மதிப்புள்ள பங்குகளைத் திரும்பப் பெற்றனர்.
உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் மற்றும் அதிகரித்த வரும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றால் தொடர்ந்து பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்து வந்தனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் உள்ளிட்டவை கச்சா எண்ணெய் விலை உயர வைத்ததுடன், உலகளவில் பணவீக்கம் குறித்த கவலையும் மீண்டும் எழுப்பி உள்ளது.
இதற்கிடையில், மேற்கு ஆசிய மோதலால் உருவான எரிசக்தி நெருக்கடி, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கம் மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருவதால், பங்குகளின் விற்பனை தொடர்கிறது.
சமீபத்திய அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் கூட இந்த விற்பனை வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்ட நிலையில், தென் கொரியா மற்றும் தைவான் சந்தைகளின் வலுவான வருவாய் வளர்ச்சி கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதால், அவை தற்போது கவர்ச்சிகரமாக இருப்பதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Foreign investors maintained their aggressive sell-off in Indian equities, withdrawing Rs 48,213 crore in the first 10 days of April.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.