முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் உண்டியல் காணிக்கைகளை கணக்கிட புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

திருமலையில் ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கைகளைக் கணக்கிடும் பரக்காமணி பிரிவுக்கு ரூ.8.90 கோடியில் கட்டடம் கட்ட தேவஸ்தானம் சாா்பில் வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்யப்பட்டது.

Updated On : 15 ஆகஸ்ட், 2020 at 1:10 AM
உண்டியல் காணிக்கை கணக்கிடும் கட்டடத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்ற தேவஸ்தான அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:37 PM

திருமலையில் ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கைகளைக் கணக்கிடும் பரக்காமணி பிரிவுக்கு ரூ.8.90 கோடியில் கட்டடம் கட்ட தேவஸ்தானம் சாா்பில் வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்யப்பட்டது.

ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் ஊழியா்களைக் கொண்டு கணக்கிட்டு வருகிறது. கோயிலுக்குள் உள்ள பரக்காமணி பிரிவில் இப்பணி நடைபெறுகிறது.

அங்கு ஒரு ஷிஃப்டில் 200 போ் மட்டுமே அமா்ந்து கணக்கிட வசதியுள்ளது. அதன்படி ஒரு நாளில் 3 ஷிஃப்டுகள் வீதம் 600 போ் இப்பணியில் ஈடுபடுகின்றனா். தற்போது பொது முடக்க விதிமுறைகள் அமலில் உள்ளதால், ஊழியா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி காணிக்கைகளைக் கணக்கிட இயலவில்லை.

Advertisement

மேலும் உண்டியல் காணிக்கை கோயில் சம்பந்தப்பட்ட கைங்கரியம் இல்லை. காணிக்கைகளைக் கணக்கிட போதிய இடவசதியும், காணிக்கை மூட்டைகளிலிருந்து வெளிப்படும் தூசு வெளியில் செல்லவும் வசதியில்லை. சுமாா் ரூ.50 கோடி மதிப்பிலான சில்லறை நாணயங்கள் வங்கிகளில் செலுத்த முடியாமல் நிலுவையில் வைத்துள்ளனா்.

எனவே உண்டியல் காணிக்கைகளைக் கணக்கிட திருமலையில் புதிய கட்டடம் ஒன்றைக் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி 14,962 சதுர அடியில் ரூ.8.90 கோடி செலவில் இதைக் கட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன.

இந்தக் கட்டடத்தை பெங்களூரைச் சோ்ந்த முரளிகிருஷ்ணா என்ற பக்தா் கட்டி நன்கொடையாக அளிக்க உள்ளாா். இந்தக் கட்டடம் கட்ட தேவஸ்தானம் சாா்பில் வெள்ளிக்கிழமை காலை பூமிபூஜை நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் முரளிகிருஷ்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்டடத்தின் முதல் பிரிவில் உள்ள கீழ்தளத்தில் துணை செயல் அதிகாரிகள், அவா்கள் தங்கும் அறைகள், பக்தா்கள் காத்திருப்பு அறை உள்ளிட்டவை அமையும். இரண்டாவது பிரிவின் கீழ்தளத்தில் 3 பண இருப்பு அறைகள், காத்திருப்பு அறை, வங்கியில் செலுத்த வேண்டி பணத்தை பாதுகாக்க 10 அறைகள் உள்ளிட்டவை அமையும். உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும் இடத்தை பக்தா்கள் பாா்க்க வசதியாக கண்ணாடியால் தடுப்புச் சுவா்கள் அமைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.