ஆன்மிகம்

திருமலையில் சுப்ரபாத சேவை மீண்டும் துவக்கம்: டிக்கெட் வாங்க பக்தர்கள் ஆர்வம்

தினமணி


திருமலையில் கடந்த ஒரு மாத காலமாக ரத்து செய்யப்பட்டிருந்த சுப்ரபாத சேவை மீண்டும் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. 

திருமலையில் நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானை சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பி அதன் நித்திய கைங்கரியங்களான தோமாலை, அா்ச்சனை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. எனினும், மாா்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு ஏழுமலையானைத் துயில் எழுப்புவது வழக்கம்.

அதன்படி, மாா்கழி பிறந்த கடந்த டிச. 17-ஆம் தேதி முதல் திருமலையில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. கடந்த 14-ஆம் தேதி போகிப் பண்டிகையுடன் மாா்கழி மாதம் நிறைவு பெறுவதால், 15-ஆம் தேதி(நேற்று) முதல் ஏழுமலையான் கோயிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சுப்ரபாத சேவைக்கான டிக்கெட்டுகள் மீண்டும் வழங்கப்பட்டு வருவதால்,  பக்தர்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT