சுபநிகழ்ச்சிகள் நடக்கப்போகிறது இந்த ராசிக்காரர்களுக்கு: வாரப் பலன்கள் ஜூலை (24-30)
இந்த வாரப் பலன்களை (ஜூலை 24-30) தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.
இந்த வாரப் பலன்களை (ஜூலை 24-30) தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். உங்கள் செயல்கள் வெற்றியுடன் முடியும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும்.
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் வேலைச் சுமைகள் குறையும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் யாவும் வெற்றிகரமாக முடியும். சொத்து தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனத்துடன் நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். மக்களுக்கான உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பெண்மணிகள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். புதிய ஆடைகள் சேர்க்கை ஏற்படும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபட்டு வரவும். பானகம் நிவேதனம் செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 24, 25.
சந்திராஷ்டமம்: 29, 30.
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
திட்டமிட்ட வேலைகள் சிறிது தாமதமானாலும் அவற்றை நல்லபடியாக முடித்து விடுவீர்கள். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சுமாராகவே இருக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். வியாபாரிகள் முயற்சிக்குத் தகுந்தபடி நல்ல லாபத்தைக் காண்பார்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடவும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம்.
அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் ஆர்வம் கூடும். எனினும் புதிய முயற்சிகள் வேண்டாம். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். அதேசமயம் சிரமங்களுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடவும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் கால நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பீர்கள்.
பரிகாரம்: பெருமாளை தரிசிக்கவும்.
அனுகூலமான தினங்கள்: 24, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழிலில் லாபம் கிட்டும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். பணவரவும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்களிடம் அனுசரணையாக இருப்பார்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமூகமாக முடியும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுமையைப் புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். சிறிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்கலாம்.
அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் இடைஞ்சல் செய்ய முற்படுவார்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். அதேசமயம் சில சிரமங்களுக்கு பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்களைப் பொருத்தவரை குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அதில் இருந்து விடுபடுவீர்கள். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று சூரிய பகவானை தியானிக்கவும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு
நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 25, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
காரியங்கள் அனைத்தும் நேர்த்தியாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொருளாதாரம் சீராகவே தொடரும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் கூடுவார்கள். ஏமாற்றங்களைத் தவிர்க்க எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளவும்.
உத்யோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிர்பாராத பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாக இருக்கும். விவசாயிகள் வயல், வரப்புச் சண்டைகளில் நல்ல முடிவைக் காண்பார்கள். கால்நடைகளால் கூடுதல் லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் உட்கட்சி பூசலில் பங்கேற்காமல் கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் தங்கள் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனையும், அஷ்டமி தினத்தில் பைரவரையும் வணங்கவும்.
அனுகூலமான தினங்கள்: 24, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை சிறிது குறையும். மனோ பலத்தைப் பெருக்கிக் கொண்டு செயல்படவும்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிது ஈடுபாடு குறையும். பணவரவுக்குக் குறை வராது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக முடியும். அதேநேரம் போட்டி பொறாமைகளை சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நன்றாக முடியும். விளைபொருள்களால் லாபம் தென்படும்.
அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கடந்தகாலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முயல்வீர்கள். கலைத்துறையினர் மற்றவர்களின் பாராட்டுகளில் மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் செலுத்தவும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
பரிகாரம்: மகா விஷ்ணுவை வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 25, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொருளாதாரம் சுமாராகவே இருக்கும். மனதில் சந்தோஷமான நிகழ்வுகளை அசை போடுவீர்கள். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய ஆடைகள் சேரும். குடும்பத்திலும் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு உண்டாகும்.
உத்யோகஸ்தர்களின் திறமைகளை மேலதிகாரிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள். பொறுமையுடன் வேலை செய்து வரவும். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம். மற்றபடி கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நலமாக முடியும். விவசாயிகளின் வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம்.
அரசியல்வாதிகள் கடினமாகப் பாடுபட்டு தங்கள் கெளரவத்தை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டியிருக்கும். இதனால் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினரைப் பொருத்தவரை புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம்.
அனுகூலமான தினங்கள்: 26, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
அனைத்து இடையூறுகளும் விலகி காரிய சித்திகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். அதேநேரம், உடல் ஆரோக்யம் அவ்வப்போது பாதிப்படையும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமங்கள் குறையும். மேலதிகாரிகள் உங்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் புதிய மாற்றங்கள் தென்படும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாகவே இருக்கும். தானிய விற்பனையையும் நன்றாகவே செய்து முடிப்பார்கள்.
அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. எதையும் பலமுறை ஆலோசித்து கவனமுடன் செயல்படுங்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைச் செய்வார்கள். வருமானத்தால் திருப்தி அடைவார்கள். பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். மாணவமாணவிகள் பெற்றோர்களின் சொல் கேட்டு நடந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
பரிகாரம்: மஹா விஷ்ணுவையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள்.
அனுகூலமான தினங்கள்: 27, 28.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பொருளாதார நிலைமை சுமாராக இருக்கும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் ஒரு தொய்வு நிலை காணப்படும். வாகனங்களால் செலவுகள் உருவாகும். மற்றபடி புனிதப் பயணங்களைச் செய்ய நேரிடும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முன்யோசனையுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறலாம். வியாபாரிகளுக்கு வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்த நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். குத்தகைகளை சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவது சிறப்பு.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். அதேசமயம் பொறுமையுடன் செயல்படவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும்.
பரிகாரம்: பழனி தண்டாயுதபாணியை மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள்.
அனுகூலமான தினங்கள்: 28,30
சந்திராஷ்டமம்: இல்லை
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
உங்கள் அறிவும் ஆற்றலும் பளிச்சிடும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி ஏற்படும். உங்களின் திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் வெற்றி வாகை சூடுவர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு படிப்படியான முன்னேற்றம் தென்படும். தற்சமயம் புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளைப் பொருத்தவரை கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துங்கள். வங்கியில் கடன் வாங்கி விளைச்சலை அதிகரிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனமாக நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். அதேநேரம் யாரிடமும் கூட்டு சேராமல் தனித்து செயல்படுங்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் நேர்த்தியுடன் ஈடுபடுவார்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயரையும், சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானையும் வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 24, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தடைகள் விலகி, யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் உங்களைத் தேடிவரும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். தற்போது இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் இருக்கும் இடத்திலேயே திறம்படச் செயல்படுங்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் புதிய கடைகளைத் திறப்பார்கள். விற்பனையை அதிகரிக்க கடினமாக உழைப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வளர்ச்சியை அடைவார்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவுவார்கள். பெண்மணிகளைப் பொருத்தவரை கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். வெளி விஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு கல்வியில் நாட்டம் செலுத்தவும்.
பரிகாரம்: நந்திகேஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கிவர நலன்கள் கூடும்.
அனுகூலமான தினங்கள்: 25, 29.
சந்திராஷ்டமம்: 24.
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வீண் விரயங்கள் செய்ய நேரிடலாம். உடல் ஆரோக்யத்தில் சில பிரச்னைகள் உண்டாகலாம். எடுத்த காரியங்களில் இடையூறுகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நிகழும்.
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளையும், சக ஊழியர்களையும் அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக முடியும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் வயல், வரப்புச் சண்டைகளில் நல்ல முடிவைக் காண்பார்கள். கால்நடைகளால் கூடுதல் லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொருளாதார அபிவிருத்தி இருக்கும். பெண்மணிகள் உடல்நலம் பாதிக்கப்படும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் நெடுநாளைய கோரிக்கைகளில் ஒன்று நிறைவேறும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 27, 30.
சந்திராஷ்டமம்: 25, 26.
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடமைகளை சரிவரச் செய்வீர்கள். எப்பாடுபட்டேனும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் இட மாற்றங்களைச் சந்திப்பார்கள். உங்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும். கொடுத்த வேலைகளை நிதானமாகச் செய்யவும். வியாபாரிகளுக்கு புதிய தொழில்கள் அனுகூலத்தைக் கொடுக்கும். எதிலும் சிரத்தையுடனும் கவனத்துடனும் நடந்துகொள்ளுங்கள். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். புதிய குத்தகைகள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.
அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். பதவி உயர்வும், பாராட்டும் பெறுவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பணவரவும் நன்றாகவே இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள் கல்வியில் வளர்ச்சி அடைய தேர்வுப் பயிற்சிகளில் முயற்சி எடுக்க வேண்டிய தருணம் இது.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள்.
அனுகூலமான தினங்கள்: 29, 30.
சந்திராஷ்டமம்: 27, 28.