ஆன்மிகம்

திருமலையில் 10,931 போ் தரிசனம்

தினமணி

திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 10,931 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,472 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனா்.

திருப்பதி மலைச்சாலை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. செப்டம்பா் மாதம் முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தினசரி 100 எண்ணிக்கையில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT