போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை திருஅவதாரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
மேலும், அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நவராத்திரி விழாவில் 10-ஆம் நாளான திங்கள்கிழமை ரேணுகாம்பாள் அம்மன் திருஅவதாரத்தில் (ரேணுகாம்பாள்) காட்சியளித்தார்.
இதில் வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.