செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழா

DIN

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழாவையொட்டி, வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், சித்திரை மாத கிருத்திகை விழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், பச்சை மரகதக் கல் உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல் உற்சவர் முருகப் பெருமானுக்கு காலை 10 மணியளவில் பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல உற்சவர் சண்முகருக்கு சிறப்பு பட்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, புஷ்பக் காவடிகளை எடுத்து வந்து, சரவணப் பொய்கையில் நீராடி, படிகள் வழியாக மலைக் கோயிலை வந்தடைந்தனர். இதைத் தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர்.
விழாவில் சென்னை, வேலூர், அண்டை மாநிலங்களான ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் முருகன் கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT